குடற்புழுக்கள்

மனிதனும் குடற்புழுக்களும்:--
*











மனிதனுக்கு வெளியில் இருந்துமட்டும் எதிரிகள் அல்லாது நம் உடலுக்குள்ளேயே குடல்களில் வளர்ந்து உல்லாச வாழ்க்கை நடத்தும் குடற் புழுக்கள் நமக்கு உள்நாட்டு எதிரிகளாகும் .ASCARIS LUMBRICOIDES குடற்புழுக்கள் காண்பதற்கு எளிதாகவும்,சிறியதாகவும் இருந்தாலும், இதன் ஆற்றல் பெரியது. நமது குடலில் இப் புழுக்கள் இன்ப உழாவரும் சிலநேரங்களில் நம் இன்ப வாழ்வுக்கு பெரும் தடையாக உள்ளது. 1930 வாக்கில் இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அது பற்றிய வியத்தக்க உண்மைகள் கண்டறியப்பட்டது. நமது குடல் வாழ் உயிரினங்களில் கண்ணுக்கு தெரியக்கூடியதும் உருவத்தில் பெரிதாக இருக்கக் கூடியதுமான இப்புழுக்கள் ஆண்புழுக்கள் பெண்புழுக்களைக் விட உருவத்தில் சிரியதாகவும் வால் முனையில் வளைந்தும் காணப்படும்  மூன்று சிறுத்த உதடுகள் இவைகளின் வாயிலைச் சுற்றி அமைந்து இருக்கும்.
              இவை நமது சிறுகுடலில் வசிக்கும் இந்தப் புழுக்கள் பாதிசீரனித்த உணவினை உண்டு வளர்கின்றன. குடலின் உட்சுவர்களை துளைத்து காயப்படுத்துகின்றன பல லட்சக்கனக்கான முட்டைகளை இடும் ஆற்றல் பெற்றுள்ளது. கிராம்- GRAAM  என்ற ஆய்வாளர் 1925 ல் இப்புழுக்களின் முட்டையிடும் ஆற்றலைப் பற்றி ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறார். அதன் படி வளர்ச்சி பெற்ற ஒரு பெண் புழு 2,70,00,000 இரண்டு கோடியே எழுபது லட்சம் முட்டைகள் வரை உற்பத்தி செய்யும்திறனுள்ளதாக தெரிவிக்கிறார். ஒரு கிராம் எடை உள்ள மலத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான முட்டைகளைக் காணலாம் என்றும் சராசரியாக கணக்கிடும் போது ஒவ்வொரு நாளும் 20,00000 லட்சம் முட்டைகள் உற்பத்தியாகின்றன என்று தெரிய வருகிறது. நல்ல வேளையாக அனைத்து முட்டைகளும் பொரிந்து விடுவதில்லை. கோடிக்கு ஒன்றுதான் புழுவாக மாறுகிறது. இயற்கை இப்புழுக்களுக்கு கணக்கில் அடங்காத முட்டையிடும் ஆற்றல் அளித்து இருந்தாலும் அவைகளின் இன்பப் பெருக்கத்திற்கு ஒரு எல்லை வகுக்கப்பட்டு உள்ளது. முட்டைகள் மிகச்சிறியதாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். மலத்தின் மூலமாக நாள் தோறும் இலட்சக்கணக்கான முட்டைகள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இவைகள் பெரும் பாலானவை அதிக வெப்பத்தாலும், இரசாயன செயல்களாலும் அழிந்து விடுகின்றன. தேவையான வெப்பமும் ஈரப்பதமும் கிடைத்தால் முட்டையினுள் கரு வளர ஆரம்பிக்கிறது.100’ டிகிரிக்கு மேலும்  60’க்கு கீழும் அழிந்து விடுகின்றன. கருவளர்ச்சிக்கு 85’f  உஷ்ணம் தேவைப்படுகிறது
*
              முட்டைகள் தண்ணீரின் மூலமாகவோ அல்லது உணவுகள் மூலமாகவோ நம் உடலுக்குள் சென்று முழுவளர்ச்சி பெறுகின்றன. முட்டைகள் சிறுகுடலை அடைந்து பொரிந்து சிறிய லார்வாக்களாக வெளிவருகின்றன. இந்த லார்வாக்கள் வளர்ச்சி பெறவேண்டி நமது உடலுக்குள் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கின்றன.குடலின் சுவற்றைத் துளைத்து முதலில் இரத்த நாளங்களின் வழித்துணையாகக் கொண்டு கல்லிரலை வந்தடைகின்றன. பிறகு இதயத்தை நோக்கி படை எடுக்கின்றன இதயத்தினின்று வெளியேறி நூரையிரலுக்குக்குள் வந்து சேர்கின்றன.
*
              மூட்சுக் குழல் வழியாக தொண்டையின் (oesophagus)  நுழைகின்றன. முடிவில் தங்களின் பழைய இடமான சிறு குழலுக்கு வந்து சேர்கின்றன. இந்தச் சுற்றுப்பயனத்தில் முழுவளர்ச்சி அடைகின்றன இதன் பிறகு பல்கி பெருகுகின்றன. அவைகள் வெற்றிகரமாக இந்த பயணத்தை முடிக்க குறைந்த பட்சம் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. முட்டையில் இருந்து வெளிவந்த லார்வாக்கள் முழு வளர்ச்சிகாகச் சுற்றுப் பயணத்தை மேற் கொண்டாலும் நமக்கு அபாயங்களை விளைவிக்க பலசந்தர்ப்பங்கள் இதற்கு கிடைக்கின்றன. தனது பயணத்தில் நுரையீரலை அடைந்து அங்குள்ள இரத்த நாளங்களைத் துளைத்து இரத்தக் கசிவிற்கு வழிவகுக்கிறது. அதனால் வாயுப் பரிமாற்றம் தடைப்படுகிறது. நிமோனியா உண்டாகிறது, ஒரே நேரத்தில் பல லார்வாக்கள் இரத்த நாளங்களை சேதப்படுத்தினால் உயிருக்கு அபாயம் ஏற்படும். பொதுவாக இந்த நிலைமை ஏற்படுவது இல்லை. வயிற்றுக் கோளாறுகள் வந்து வயிற்றுப் போக்கு போன்ற சூழ்நிலை காரணமாக இவை வெளியேற்றப் படுகிறது. மற்றும் உணவுப்பாதையுள் இப் புழுக்களுக்கு ஏதாவது எதிரிப் பொருள்கள் உள்சென்றால். எல்லாப் புழுக்களும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு குடல் பகுதியை அடைத்து விடுகின்றன. மலம் வெளியேறாமல் மிகப் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்.              
       குடல் சுவரைத் துளைத்துக் இரத்தக் கசிவு ஏற்படும்போது.சிறு குடலுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் உள்ள தொடர்பை இவை துண்டித்து விடுகின்றன, இதன் காரணமாக குடல் இயக்கம் பாதிக்கப்படுகிறது. சாங் - sang என்ற உயிரியல் அறிஞர் 1938 ல் ஒரு உண்மையை கண்டறிந்தார். இப்புழுக்கள் திரவம் போன்ற ஒரு பொருளை வெளிவிடுகின்றன இந்தப் பொருள் டிரிப்சின்- TRYPSIN  என்ற சீரான நீரின் சக்தியை அழிக்கும் தன்மை வாய்ந்தது. இதனால் புரோட்டின்கள் செரிக்கப்படாமல் விடப்படுகிறது. இதன் பயனாக நமது உடல் வளர்ச்சி குன்றுகிறது.
       இவை கல்லிரலில் இருந்து பித்த நாளத்தத்தின் மூலம் பித்தபையை அடைந்து பல இடையூறுகளை விளைவிக்கின்றன. இதனால் சீரனசத்தி பாதிக்கப்படுகிறது. 1957 ல் சீனாவில் சாங்கை மருத்துவ மனையில் சுமார் - 1685 நோயாளிகளுக்கு ஏற்பட்ட அசிரணக் கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சை நடந்தது அதில் பத்து சதவீதம் பேர்களின் பித்த நாளங்களில் இருந்து குடற்புழுக்கள் வெளியில் எடுத்து உள்ளார்கள். இதுபோல் ஒருவரின் கண்களில் இருந்து இந்தப் புழுவை எடுத்து உள்ளார்கள் என்றால் நாம் நம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். இது சமீபத்தில் எடுக்கப்பட்ட புழுவின் படம். 
*
                மற்றும் நான் பழனி திருக்கோவில் சித்த மருத்துவராக பணியாற்றிக் கொண்டு இருந்த போது 1980 ல் திண்டுக்கல்லில் இருந்து ஒரு 22 வயது பெண்ணை என்னிடம் சிகிச்சைக்காக அந்த பெண்ணின் தாயார் அழைத்து வந்து இருந்தார். அவரது அம்மா என்னிடம் அந்த பெண் முதல் முறை மாத விலக்கு ஏற்ப்பட்டதற்கு பின் இந்த ஐந்து வருடங்களாக மாதவிலக்கு ஆகவில்லை என்றும் பலவித சிகிச்சைகள் டானிக்குகள் கொடுத்தும் குணம் ஆகவில்லை என்று கூறினார்கள் நான் கவனமாக அந்தப் பெண்ணை பரிசோதித்து பார்த்ததில் மிகுந்த சோகை நோய்க்கு ஆட்பட்டு இருந்தாள் அந்த பெண்னை   விசாரித்ததில் சிலநேரங்களில் வாந்தியில் ஒருசாண் நீளமுள்ள புழுக்கள் வெளியேறியதாக கூறினார்கள் அதன் அடிப்படையில் பத்து நாட்களுக்கு உறிய பூச்சி மருந்தும் இலகு மலம் போக்கியும் கொடுத்து பத்து நாட்கள் கழித்து வரக் கூறியிருந்தேன் உண்மையில் பத்து நாட்கழித்து வந்த அந்த பெண் தினசரி வாந்தி மூலமாகவும் மலத்தின் மூலமாகவும் ஒவ்வொருநாளும் குறைந்தது இருபதுக்கும் மேலான புழுக்கள் தினசரி வந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்கள் நான் மீண்டு பத்து நாட்கள் கொடுத்தனுப்பினேன் இது போல் மீண்டும் ஒரு முறையாக கொடுத்து முற்றிலும் புழுக்கள் வருவது நின்ற பின் அயச்செந்தூரம் மற்றும் இரத்த விருத்திக்கான மருந்துகளும் பத்து நாட்களுக்கு இடையில் ஒரு முறையாக பூச்சி மருந்தும் சுமார் மூறு மாதம் கொடுத்து வந்ததில் அந்த பெண் பூரணமாக குணமாகி  மாதவிலக்கு சுழற்சியும் சரியாக ஏற்பட ஆரம்பித்தது. இதில் இருந்து குடற்புழுவுகளின்  ஆற்றல் பற்றி அறியலாம். சிகிச்சை எடுத்துக் கொள்வது எவ்வளவு  அவசியம் என்பதை உணரவேண்டும். .
       நாம் இனி சித்த மருத்துவத்தில் குடற்புழுக்கள் பற்றி என்ன கூறியுள்ளது பற்றி பார்ப்போம். அகத்தியர் குனவாகடத்தில் இருந்து :--
*
தானான மலக்கிருமி ரோகம் தன்னைத்
தானறியச் சொல்லுகிறேன் தன்மைகேளு
மானான மலக்கிருமி சாதி மூன்றில்
மகத்தான இருபூச்சி குழாலாய் தோன்றும்
ஊனான ஒரு பூச்சி கெட்டியப்பா
உள்ளபடி வயிற்றுக் குள்ளிருக்கும் பாரு
தேனான பெரும்பூ நாக்குப்பூச்சி
தொல்லுலகில் குழந்தையுட சிறுகுடலில் இருக்குங்கானே
                                                                      ------      அகத்தியர் குணவாகடம் – 297
காணடா முக்காலடி நீளமுள்ள
கடும் பூச்சி தானிருக்கும் குழந்தைகட்கு
பேணடா இதற்குள்ளே பெரும் பூச்சிக்குகப்பா
பெருத்துமே பெரிதாக இருக்கும் பாரு
வானடா ஆண்பூச்சி அதற்குக் கொஞ்சம்
வன்மையாச் சிறிதாக இருக்கும் பாரு
பூணடா குடலிற்சஞ்சரித்தா லுந்தான்
புனிதமுடன் மேலும் பாரே
                                                              ----- அகத்தியர் குணவாகடம் - 298
ஏறியே அன்னா சயத்திற் சென்று
இதமாகக் கீழிறங்கிப் பெருங்குடலிற் சென்று
வாரியே அண்ணா சயத்திற் சென்றால்
வளமாக வாந்தியால் வெளியே தோன்றும்
வாரியே பெருங்குடலிற் சென்றதனால்
நலமான மலத்தோட கீழே தோன்றும்
காரியே ஆணுக்கும் பெண்ணுக்கும் தான்
கனமாகப் பூச்சிகள் தானிருக்கும் பாரே
                                                      ------- அகத்தியர் குணவாகடம் – 299
இருக்கின்ற திமிர்ப்பூச்சி விபரங்கேளு
என்மகனே இந்தக் குனந்தன்னைப் பாரு
பருக்கின்ற பெருங்குடலின் வளைவிலேனும்
பண்பாகத் குதத்துக் குள்ளே யேனும்
இருக்குதடா காலங்குலப் பிரமாண மாக
இதமான ஆண்பூச்சி தன்னைப் பார்க்கிலு ந்தான்
பருக்கின்ற பெண் பூச்சி நீண்டு காட்டும்
பண்பாக இது செய்யுங் குணத்தைப் பாரே
                                               ---- அகத்தியர் குணவாகடம் – 300
பாரடா சிறிதாக இருந்தா லுந்தான்
பண்புடனே குதத்தில்தான் நமைச்சல் செய்யும்
கூறடா சிலவேளை யிரைச்சல்காட்டும்
கொற்றவனே முக்காளுந்தான் காணு மப்பா
தேரடா தட்டை என்ற கிருமி சாதி
தெளிவான நாடியைப் போல் தட்டையாக
தூரடா துண்டுகள் போல் ஒட்டிக் கொள்ளும்
துப்பரவாய் நீளமாய் இருக்குந் தானே
                                              ----- அகத்தியர் குணவாகடம் – 301
நீளத்தில் ஐந்து முதற் பதினைந்து கெசமுண்டு
நிச்சயமாய்ச் சிறுகுடலில் சஞ்சரிக்கும் பாரு
ஆழத்தில் அதின் சிரசிற் கொஞ்சம் தானே
அப்பனே தட்டையாய் மத்தியில் தான்
நாளத்தில் சீமுளை போலே தோன்றும்
நலமான போசனத்திற் கலையு வார்கள்
கோலத்திற் பலவீனம் திரேகம் வாடும்
கொற்றவனே அன்னாசயம் வேதனையே காட்டும்
                                             ------ அகத்தியர் குணவாகடம் – 302
காட்டுகின்ற குறியதனைச் சொல்வேன்பாரு
கனமான வயிற்றிலிப் பூச்சி கானில்
பூட்டுகின்ற வயிற்றில் வேதனையே செய்யும்
பொல்லாத வயிறு விம்மல் சோகைகாட்டும்
நாட்டுகின்ற மலக்குடல் குதத்தில் தினவு
நலமான வாய்நாற்றம் பேதி காணும்
தாட்டிகமாய் யிரவிற்பல் கடிப்பான் பாரு
சதாகாலம் அதிகபசி காணும் பாரே
                                              ------ அகத்தியர் குணவாகடம் – 303  
காணுகின்ற வயிற்றில் தான் அதிகமாகக்
கணமாகக் குத்திக் கொண்டிருக்கு மகிழ்
பூனுமடா வலியுடனே காக்கை வலிகாணும்
பொல்லாத இந்நோய் தான் தீரவென்றால்
கோணாமல் பேதிக்கு எண்ணை ஈய்ந்து
கொடிதாக அதற்கு முன் கசப்பு பாண்டம் ஈய்வாய்
பேணியே மூன்று நாள் கொடுத்த பின்னால்
கொற்றவனே எண்ணெய்தான் பேதிகீவாய்
                                                ------ அகத்தியர் குணவாகடம் – 304  
பேதிதான் ஆனபின்பு சொல்லக்கேளு
பெரிதான நிலவேம்புக் கியாழம் தந்தால்
ஊதியே ஓடுமடா புழுக்கள் எல்லாம்
உள்ளபடி சொல்லிவிட்டேன் உண்மைபாரு
ஆதிஎன்ற வரிக்குமாட்டி எண்ணெய் தந்தால்
அடியேட அத்துவிடும் புழுக்கள் முற்றும்
நீதியாய் நானுனக்குச் சொல்லிவிட்டேன்
நிச்சயமாய் நீயறிந்து செய்வாய் பாரே
                                               ------ அகத்தியர் குணவாகடம் – 305
       













சிறுவர் முதல் பெரியவர்வரை குடற்புழுக்கள் தொல்லை இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள். இதன் வளர்ச்சி பெருக்கத்திற்கு பலவித காரணிகள் உள்ளன. இதை முற்றிலும் நீக்க முடியுமா என்றால் முடியாது என்று மட்டுமே கூறவேண்டும். இன்று கீரைகள் வளர்க்கும் இடங்கள் அதற்கு பயன்படுத்தப்பட்டு கழிவு நீர் பாசனம் போன்ற காரணங்களினால் குடற்புழுக்களின் முட்டைகள் வேரின் வழியாக உட்சென்று அதன் மூலம் பரவுகிறது. மற்றும்  இன்று உணவகங்கள் பல சாலை ஓரங்களில் திறந்த சூழ் நிலைகளில் உணவுப் பொருள்களை வைத்து இருப்பத்தையும் அவற்றை நாம் தினசரி நம் வாழ்வில் ஏதாவது ஒருவகையில் பயன் படுத்தி வருகிறோம் ரோட்டோரங்களில் மனிதக் கழிவுகள், மிருகங்களின் கழிவுகளில் உள்ள இப் புழுக்களின் முட்டைகள் காற்றில் பறந்து வந்து உணவுகளில் கலக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. மற்றும் குடற்புழுக்காக தரப்படும் மருந்துகள் யாவும் இரைப்பை குடல்களில் உள்ளவற்றை மட்டுமே வெளிப்படுத்தும் சுற்றுப் பயனத்தி உள்ள லார்வாக்களை வெளியேற்றாது ஆகவே மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இதற்கான மருந்துகளையும் இலகுவான மலம் நீக்கிகளையும் பயன் படுத்தவேண்டும் அன்றைய நாளில் நம் பெரியவர்கள் குழந்தைகளுக்கு உரை மருந்து என்று சுக்கு, ஓமம், வசம்பு, சாதிக்காய், கசகசா, கடுக்காய், மாச்சக்காய் போன்றவற்றை உரைத்துக் கொடுப்பார்கள். ஆனால் இதன் விபரம் புரியாத ஆங்கில மருத்துவர்கள் பலர் அவற்றைக் கொடுக்கவேண்டாம் என்று கூறிவிடுகின்றனர் உண்மையில் இதில் உள்ள ஓமம், வசம்பு கசகசா போன்ற மருந்துப் பொருள்கள் குடற்புழுக்களின் வளர்ச்சியை தடுக்கும் மருந்தாகும் மற்றும் வேப்பெண்ணை ஆறுமாதங்களுக்கு ஒரு முறை தருவார்கள்  இதனால் கிருமிகள் அதன் முட்டைகள் மலம் மூலம் வெளியேறி அதனால் இவை கட்டுப்படுத்தப்படும் ஆனால் சில மருத்துவர்கள் மலமிலக்கிகளை முறை தவறியும் சரியான அளவுப்படி தராமலும் சித்த மருத்துவத்திற்கு கெட்ட பெயரினை உண்டாக்கி விட்டனர். எனவே  சரியான அளவில் உடலின் தன்மை போல் மலம் இலக்கியைத் தரவேண்டும் அது போல் சிலர் தாங்களாகவே அதிகப்படியாக மலம் போகவேண்டும் என்று அதனால் நன்மை ஏற்படும் என்று நம்புவார்கள் இது தவறான எண்ணமாகும் இரண்டு அல்லது மூன்று முறை மலம் வெளியேறினால் போதுமானது குடல்களில் இருக்கும் சீதபடலங்கள் வெளியேறும் வரை மலம் போகட்டும் என்று இருக்காமல் மலத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்
*.
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
       கற்றான் கருதிச் செயல்  --------- குறள்







மருத்துவத்தைக் கற்றவன் நோயாளியின் இயல்பையும், அவனது நோயின் தன்மையையும் காலத்தின் நிலைமையையும் நோக்கி அவற்றிற்கு ஏற்றவாறு மருத்துவம் செய்யவேண்டும்    
அன்பர்களுக்கு இதில் ஒரு எளிய குடற்புழுக்கள் கட்டுபடுத்தும் மருந்தினையும் தருகிறேன் இதனால் பின் விளைவுகள் இருக்காது.
கழற்சி விதை ஓடு நீக்கி ------ 50 gm
ஓமம் ----------- ------- --------- -------- 50 gm
மிளகு ---------- -------- -------- -------- 50 gm
ஏலரிசி -------- ------- --------- --------- 50 gm
வாய்விளங்கம் ------ ------ --------- 50 gm
சிவதை வேர் ------- ------- ---------- 125 gm 
( சிவதையை இதை பாலில் வேகவைத்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி உலர்த்தி   எடுத்துக் கொள்ளவும் ) இவையாவற்றையும் நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கி குப்பைகள் நீக்கி இளம் வருப்பாக வறுத்து உலர்த்தி சிறு துண்டுகளாகச் செய்து பின் மிக்சியில் போட்டு நைசாக பொடித்து அதன் அளவுக்கு சீனி பொடி செய்து சேர்த்துக் கலந்து ஒரு ஜாரில் வைத்துக் கொண்டு சிறுவர் முதல் பெரியவர்வரை இரவு நேரங்களில் ஒரு கிராம் முதல் ஐந்து கிராம் வரை வாயில் போட்டு வெந்நீர் குடிக்கவும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சாப்பிட்டு வரவும் புழுக்களின் தொல்லை குறைந்த பின் பத்து நாட்களுக்கு ஒருமுறை  சாப்பிட்டுவராலாம் இதனால் மேற்க்கண்ட தொல்லைகளும் அதனால் ஏற்ப்படும் பின்விளைவுகளும் நீங்கும் வேறு சந்தேகங்கள் இருந்தால் எனது இ மெயிலில் தொடர்பு கொள்ளவும். E.MAIL. kandasamy.k.s.pathy@gmail.com     

Comments